‛விடுதலை'-க்காக இளையராஜா இசையில் பாடிய தனுஷ் | ‛மைக்கேல்' விமர்சனம் : அனைவரையும் திருப்திபடுத்தும் படைப்பு இல்லை - ரஞ்சித் ஜெயக்கொடி | 'ஏகே 62' இந்த வாரம் அறிவிப்பு வருமா ? | இன்ஸ்டாவில் சண்டை : கடுப்பாகி எச்சரித்த சீரியல் நடிகை | ஷிவின் வெற்றி பெற்றிருந்தால்...? மனம் திறக்கும் கதிர் | படிக்கதான் முடியல அட்வைஸாச்சும் பண்ணுவோம்! டிடி வெளியிட்ட ஆக்ஸ்போர்ட் அட்வைஸ் | வாரிசு - 300 கோடி கடந்ததாக விஜய் ரசிகர்கள் செய்யும் 'டிரெண்டிங்' | 800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் |
'நான் ஈ' படம் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர் கன்னட நடிகரான சுதீப். அதன்பின் விஜய் நடித்த 'புலி' படத்தில் வில்லனாக நடித்தார். 'முடிஞ்சா இவன புடி' என்ற படத்திலும் நாயகனாக நடித்தார். கடைசி இரண்டு படங்களும் தோல்விப் படங்களாகத்தான் அமைந்தன.
தற்போது அவர் 'விக்ராந்த் ரோணா' என்ற கன்னடப் படத்தைத் தயாரித்து, நாயகனாக நடித்து அதை பான்--இந்தியா படமாகவும் நாளை(ஜூலை 28) தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடுகிறார். ஒரு பான்--இந்தியா படமாக வெளிவந்தாலும் கன்னடத்தைத் தவிர மற்ற மொழிகளில் இந்தப் படம் எந்தவிதமான பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை.
கன்னடத்தில் தயாராகி பான்--இந்தியா படமாக வெளிவந்த படங்களில் 'கேஜிஎப்' படங்கள் மட்டுமே இங்கும் பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்கடுத்து வெளிவந்த '777 சார்லி' படத்திற்கும் இங்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. சுதீப் நடித்துள்ள 'விக்ராந்த் ரோணா' படத்திற்கு மேலே சொன்ன இரண்டு படங்களுக்கும் இடையிலான சுமாரான வெற்றியாவது கிடைக்குமா என்பது நாளை தெரியும்.