அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
கன்னட சினிமாவின் பிரபல நடிகர் கிச்சா சுதீப். நான் ஈ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமான இவர் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் பன்மொழியில் பிரம்மாண்டமாய், “விக்ராந்த் ரோணா” என்ற படம் தயாராகி வருகிறது. நிரூப் பந்தாரி, நீதா அசோக் உள்ளிட்ட பலர் நடிக்க, அனூப் பந்தாரி இயக்கியுள்ளார். ஜாக் மஞ்சுநாத் மற்றும் ஷாலினி மஞ்சுநாத் தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் டைட்டில் லோகோ மற்றும் 190 நொடிகள் கொண்ட ஸ்நீக் பீக்கை உலகின் மிக உயர்ந்த கட்டிடமான துபாயின் புர்ஜ் கலிபாவில் பிரமாண்டமாக வெளியிட்டனர். பன்மொழிகளில் ஆக்சன் அட்வெஞ்சர் படமாக தயாராகியுள்ள இப்படம் 3டி தொழில்நுடபத்திலும் வெளியாக உள்ளது. உலகம் முழுதும் 14 மொழிகள் 55 நாடுகளில் வருகிற ஆகஸ்ட் 19ல் இப்படம் வெளியாகிறது.
இயக்குநர் அனூப் பந்தாரி கூறியதாவது : படம் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகள் முழுவீச்சில் நடக்கின்றன. அற்புதமான தொழில்நுட்ப குழுவினரின் உதவியால் விக்ராந்த் ரோணா வாழ்வின் தருணங்களை பிரமாண்டமான வழியில் ரசிகர்களுக்கு விருந்தாக்குவோம் என்றார்.
தயாரிப்பாளர் ஜாக் மஞ்சுநாத் கூறியதாவது : இப்படம் மூலம் உலகிற்கு, ஒரு புதிய நாயகனாக விக்ராந்த் ரோணாவை அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி. விஷுவலாக திரையில் பலவிதமான மேஜிக்கை நிகழ்த்தக்கூடிய பிரமாண்ட படைப்பு இது. பொது முடக்க காலத்தால் திரைப்படங்கள் வெளிவராத நிலையில் இப்பிரமாண்ட படைப்பை ரசிகர்கள் திரையரங்கில் காண வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். சுதீப் போன்ற நட்சத்திர நடிகரின் நடிப்பில், ரசிகர்களை மிகப்பெரும் கொண்டாட்டத்திற்கு கண்டிப்பாக கொண்டு செல்வோம் என உறுதியாக நம்புகிறோம் என்கிறார்.