Advertisement

சிறப்புச்செய்திகள்

படத்திலிருந்து நீக்கபட்டது குறித்து வருத்தப்பட்ட மகிமா நம்பியார் | சமூக வலைதள கணக்கை நீக்கிய தனுஷ் பட இயக்குனர் | தனது வீட்டின் பணி பெண்ணிற்கு உதவிய அல்லு அர்ஜுன் | நித்யா மேனனுக்கு விட்டுக் கொடுத்த ஜெயம் ரவி | சிம்பு 48வது படம் : தேசிங்கு பெரியசாமியை வாழ்த்திய ரஜினி | இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது : ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சீறிய சமுத்திரக்கனி | மறைந்த பிரதமர் இந்திரா உடன் உரையாடிய கங்கனா | மாயமான கேரள கப்பலின் பின்னணியில் படம் இயக்கும் ‛2018' பட இயக்குனர் | இயக்குனராக மாறிய ஊர்வசியின் கணவர் | தடைகளை தாண்டி 'துருவ நட்சத்திரம்' வெளிவரும்: கவுதம் மேனன் அறிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அந்நியன் கதை விவகாரம் - ஷங்கர் பதிலடி

15 ஏப், 2021 - 20:04 IST
எழுத்தின் அளவு:
Anniyan-story-issue-:-Director-Shankar-Reply

நடிகர் விக்ரமை வைத்து ஷங்கர் இயக்கிய அந்நியன் படம், ஹிந்தியில் ரீ-மேக் ஆக உள்ளது. ரன்வீர் சிங் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு நேற்று(ஏப்.,14) வெளியானது. இந்நிலையில் அந்நியன் படத்தின் கதைக்கான உரிமம் என்னிடமே உள்ளது. இப்படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்வது என்றால் என்னிடம் அனுமதி பெற வேண்டும், அதை மீறி செய்வது சட்டத்திற்கு புறம்பமானது'' என ஷங்கருக்கு இப்பட தயாரிப்பாளர் ஆஸ்கர் வி.ரவிச்சந்திரன் கடிதம் மூலம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்து ரவிச்சந்திரனுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார் ஷங்கர். அதில் அவர் கூறியிருப்பதாவது : 2005ல் அந்நியன் படம் வெளியானது. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தெரியும் இது என்னுடைய கதை என்று. இப்படத்தின் டைட்டிலில் கூட கதை, திரைக்கதை, இயக்கம் ஷங்கர் என்று தான் வெளியானது. இப்படத்திற்காக சுஜாதா வசனங்கள் மட்டுமே எழுதினார். ஆனால் அவர் இப்படத்தின் கதையை எழுதினார் என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அந்நியன் படத்தில் வசனம் எழுதியதற்காக அதற்கான உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. அவர் எந்த விதத்திலும் திரைக்கதையிலோ, பாத்திரப் படைப்பிலோ சம்பந்தப்படவில்லை. எனவே வசனகர்த்தா என்பதைத் தாண்டி அவர் வேறு எந்த வகையிலும் இப்படத்தில் ஈடுபடவில்லை.

இப்பட கதை, திரைக்கதை என்னிடம் இருப்பதால் அதை நான் விரும்பும் வகையில் பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமை எனக்கிருக்கிறது. நீங்களோ உங்கள் நிறுவனமோ எந்தவிதமான உரிமைகளையும் கோர முடியாது. உங்களுக்கு அந்த உரிமையை நான் எழுத்துப்பூர்வமாக கொடுக்கவில்லை. அப்படி இருக்கையில் கதைக்கான உரிமம் உங்களிடம் இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. ஒரு தயாரிப்பாளராக அந்நியன் படம் மூலம் லாபம் பெற்றுவிட்டீர்கள். தற்போது தேவையின்றி உங்களுக்கு தொடர்பில்லாத எனது எதிர்கால முயற்சியின் மூலம் ஆதாயம் பெற பார்க்கிறீர்கள். இனி இது போன்று பேச மாட்டீர்கள் என்று நம்புகிறேன்”.

இவ்வாறு தெரிவித்துள்ளார் ஷங்கர்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
கிச்சா சுதீப்பின் “விக்ராந்த் ரோணா” ஆக., 19ல் ரிலீஸ்கிச்சா சுதீப்பின் “விக்ராந்த் ரோணா” ... கொடுமைப்படுத்தும் போலீஸ் எஸ்.ஐ., : குடும்பம் நடத்திய நடிகை ராதா புகார் கொடுமைப்படுத்தும் போலீஸ் எஸ்.ஐ., : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

ranjan - france,பிரான்ஸ்
16 ஏப், 2021 - 12:42 Report Abuse
ranjan சங்கர் கதை திருட்டில் வல்லவர்.அந்நியன் எந்திரன் எல்லாம் திருட்டு கதைகள் ,அப்பாவிகளிடம் இருந்து திருடியது .இப்போது கூட லைக்காவின் இந்தியன் irandu சினிமாவை முடித்து கொடுக்கவில்லை.இது தர்மமா?
Rate this:
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
16 ஏப், 2021 - 05:28 Report Abuse
Thirumurugan படத்தயாரிப்பாளருக்கு தான் கதை சொந்தமாகும். மொத்தமாக அனைத்துக்கும் சேர்த்து தான் அவர் பணம் கொடுத்திருப்பார்.
Rate this:
NK -  ( Posted via: Dinamalar Android App )
16 ஏப், 2021 - 05:06 Report Abuse
NK producer should have rights
Rate this:
g g - ,
16 ஏப், 2021 - 14:20Report Abuse
g g Mr NK..for an example..you have given ur house for rent..and monthly u r getting some amount as rent from ur tenant..after some point of time, the tenant is telling I cannot vacate this house as I have paid rent every month and I ll consider this as my own house..will u agree for it? Mr NK...
Rate this:
NK -  ( Posted via: Dinamalar Android App )
16 ஏப், 2021 - 05:06 Report Abuse
NK producer holds the rights always
Rate this:
vira - tamil naadu,பிரான்ஸ்
15 ஏப், 2021 - 20:57 Report Abuse
vira அப்படி போடு ஷங்கர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Kallapart
  • கள்ளபார்ட்
  • நடிகர் : அரவிந்த் சாமி
  • நடிகை : ரெஜினா
  • இயக்குனர் :ராஜபாண்டி
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in