'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
2020ம் வருடத்திற்கான 68 தேசிய விருது பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன. இதில் சிறந்த நடிகராக முதன்முறையாக சூர்யா தேசிய விருது பெற்றுள்ளார். இதை தொடர்ந்து சூர்யாவுக்கு திரை உலகில் இருந்தும் ரசிகர்களிடம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. மலையாள திரை உலகிலும் முன்னணி நட்சத்திரங்களான மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பலர் சூர்யாவுக்கு தேசிய விருது பெற்றதற்காக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மம்முட்டி தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறும்போது சூர்யாவின் பிறந்தநாளுக்கு கிடைத்த மிக சரியான பரிசு என்று குறிப்பிட்டு வாழ்த்தி உள்ளார். இன்று சூர்யாவின் பிறந்தநாள் என்பதும் அதற்கென்று பரிசு கொடுப்பது போல அவருக்கு தேசிய விருது கிடைத்திருப்பதையும் குறிப்பிட்டு மம்முட்டி வாழ்த்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.