இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் தில் ராஜு. பல முன்னணி ஹீரோக்களை வைத்து பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். தெலுங்கிலிருந்து பாலிவுட் பக்கம் போனால் என்ன என்று ஆசைப்பட்டவருக்கு அதிர்ச்சி கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள் பாலிவுட் ரசிகர்கள்.
ஹிந்தியில் அவர் தயாரிப்பில் ஷாகித் கபூர் நடித்து வெளிவந்த 'ஜெர்சி' படம் அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் வெளிவந்த மற்றொரு ஹிந்திப் படமான ராஜ்குமார் ராவ் நடித்த 'ஹிட்' படமும் முதல் வாரத்திலேயே மிகச் சுமாரான வசூலை மட்டுமே கொடுத்து தோல்வியடைந்துவிட்டது.
தற்போது அவர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் ஒரு படத்தையும், விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தையும் தயாரித்து வருகிறார். ஷங்கர், விஜய் என இரண்டு தமிழ்க் கலைஞர்கள் அவருக்கு பெரிய வெற்றியைத் தருவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.