Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகள் வயது நடிகைகளுடன் ஜோடி, வயதான நடிகர்கள் நிறுத்துவார்களா?

19 ஜூலை, 2022 - 12:00 IST
எழுத்தின் அளவு:
Will-senior-actors-stop-duet-with-young-heros

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே நேர்மையான படைப்புகளைக் கொடுக்க வேண்டும் என நினைத்து செயல்படுகிறார்கள். அவர்களைப் போலவே சில நடிகர்களும் இருக்கிறார்கள். மற்றவர்கள் தங்களது இமேஜ் தான் முக்கியம், வசூல் தான் முக்கியம் என்ற நினைப்புடனேயே இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியில் உள்ள நடிகர்களில் ரஜினிகாந்த் 70 வயதைக் கடந்தவர். கமல்ஹாசன் 70 வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர். அஜித் 50 வயதைக் கடந்தவர், விஜய் 50 வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர். இவர்கள் அனைவருமே தங்கள் வயதை விட பாதி வயது குறைந்தவர்களுடன்தான் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறார்கள்.

ஒரு காலத்தில் 50 வயது ஹீரோக்கள் கல்லூரி மாணவர்களாக நடித்ததைப் போலத்தான் இதுவும் பொருத்தமற்ற ஒரு விஷயம். திரையிலேயே இவர்களது வயது தெரிந்துவிடுகிறது. அப்படியிருக்கும் போது மிகவும் வயது குறைந்த நாயகிகளுடன் ஜோடி சேர்ந்து திரையில் நடனமாடும் போது சிரிப்புத்தான் வருகிறது. அதிலும் காதல் காட்சிகள் என்றால் சொல்லவே வேண்டாம்.

கடந்த இரண்டு நாட்களாக விக்ரம் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. விக்ரமிற்கு வயது 56, ராஷ்மிகாவுக்கு வயது 26. இருவரது ஜோடிப் பொருத்தத்தை நினைத்தாலே சிரிப்புதான் வருகிறது. விக்ரம் ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவர். ராஷ்மிகா சிறிய உருவம் கொண்டவர். விக்ரம், ராஷ்மிகா இருவரையும் திரையில் ஒன்றாகப் பார்த்தால் யானை பக்கத்தில் மான் இருப்பதைப் போலத்தான் இருக்கும்.

தமிழ் சினிமாவை சில இளம் இயக்குனர்கள் வேறொரு பாதையில் முன்னெடுத்து வருகிறார்கள். அவர்களில் பா.ரஞ்சித்தும் ஒருவர். அவர் இதையெல்லாம் யோசிக்க மாட்டாரா என்ன ?.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
நிழல் போல் பார்த்திபனை பின்தொடரும் ‛இரவின் நிழல்' நாயகிநிழல் போல் பார்த்திபனை பின்தொடரும் ... அடுத்தடுத்து தோல்விகளால் துவண்ட விஜய் படத் தயாரிப்பாளர் அடுத்தடுத்து தோல்விகளால் துவண்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

DVRR - Kolkata,இந்தியா
22 ஜூலை, 2022 - 17:01 Report Abuse
DVRR manmadha leelaiyai venraar undo enra kaalaththilirundhu ippadiththane nadakkinrathu. emjiaar sandhiyaa emjiaar jeyalilatha ennavaam
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
22 ஜூலை, 2022 - 13:00 Report Abuse
Natarajan Ramanathan SSR, விஜயகுமாரி போன்றவர்கள் காலேஜில் படிப்பதாக காண்பித்த கொடுமையை எல்லாம் சகித்திருக்கோம்.
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
22 ஜூலை, 2022 - 12:57 Report Abuse
Natarajan Ramanathan பா ரஞ்சித் போன்ற பொறம்போக்குகள் சமூகத்தை சீரழிப்பதற்காகவே கேவலமாக படம் எடுக்கும் மூதேவிகள்.
Rate this:
raja - madurai,இந்தியா
21 ஜூலை, 2022 - 14:08 Report Abuse
raja mgr சிவாஜி காலத்துல இருந்தே இப்பிடித்தான். 70 வயசு ஹீரோவுக்கு 65 வயசு ஹீரோயின போட்ட படம் ஓடாது. ஹீரோயின் எல்லாம் ஹோரோக்காக அல்ல, அது பாலாபிசேகம் செய்யும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்காக.
Rate this:
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
20 ஜூலை, 2022 - 18:38 Report Abuse
Rangarajan Pg சினிமா என்றாலே பொய் தானே, அப்படி தான் இருக்கும் அதுவும் ப. ரஞ்சித் போன்ற ஆட்கள் சமூகத்தை சீரழிப்பதற்காகவே படமெடுப்பவர்கள். அவர்கள் எடுக்கும் படம் வேறொரு பாதையில் தான் போகும்.
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Na Na
  • நா நா
  • நடிகர் : சசிகுமார் ,
  • இயக்குனர் :NV நிர்மல்குமார்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in