'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
வெப்சீரிஸில் பவி டீச்சராக நடித்து பிரபலமானவர் பிரிகிடா. உலகின் முதல் லான்-லீனியர் படமாக பார்த்திபன் இயக்கி, நடித்து சமீபத்தில் வெளியான ‛இரவின் நிழல்' படத்தில் உதவி இயக்குனராக சேரப்போனவர் அந்த படத்தில் நாயகியாகவும் மாறினார். படத்தின் தலைப்பை போல் இப்போது பார்த்திபனின் நிழலாக வலம் வருகிறார் அம்மணி. கிட்டத்தட்ட 90 நாட்களுக்கு மேல் நடந்த பட பிடிப்பில் அந்த யூனிட் முழுக்கவே இருந்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து படம் வெளியீட்டு வேளைகளில் பார்த்திபன் இருந்த போதும் அவருடனே இருந்து பட வேலைகளை கவனித்து வந்தார்.
பத்திரிக்கையாளர் காட்சி அன்றும் பார்த்திபன் கூடவே காரில் வந்து இறங்கினார். படம் வெளியீடு அன்று காலை 4 மணி காட்சியிலும் பார்த்திபன் கூடவே அட்டை போல ஒட்டி கொண்டு நின்றார். படத்தின் எல்லா புரொமோஷன்களிலும் பிரிகிடா இல்லாமல் இல்லை. பார்த்திபன் யார் பேர் முதலில் சொல்கிறாரோ இல்லையோ பிரிகிடா பேர் முதலில் வரும். அந்தளவுக்கு பார்த்திபன் போகும் இடமெல்லாம் அவரின் நிழலாகவே வலம் வருகிறார்.
இந்த படம் வெற்றிக்காக சில மாதங்களுக்கு முன் பார்த்திபன் திருப்பதி சென்றிருந்தார். அப்போதும் அவருடன் பயணித்தார் பிரிகிடா. இந்த படத்தில் அவர் நிர்வாணக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமல்ல சமீபத்தில் ஒரு பேட்டியில் சேரி தொடர்பாக அவர் பேசியது சர்ச்சையானது. இந்த விஷயத்திற்கு பிரிகிடா மன்னிப்பு கேட்டார். அதைத்தொடர்ந்து பார்த்திபனும் அவர் சார்பாக தனது வருத்தத்தை பதிவு செய்தார்.