சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி |

பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் நாயகியாக நடித்தவர் பிரிகிடா. இப்படத்தில் இவர் ஒரு நிர்வாண காட்சியில் நடித்திருந்ததால் இது பரபரப்பாக பேசப்பட்டது. அதையடுத்து இப்படம் வெளியான நேரத்தில் ஸ்லம் ஏரியாவில் கெட்ட வார்த்தைகளாக பேசுவார்கள் என்று பிரிகிடா சொன்னதும் சர்ச்சையானது. அதோடு அவர் நிர்வாணமாக நடித்த காட்சியும் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் விவாதத்துக்கு உள்ளானது.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், இரவின் நிழல் படத்தில் நான் நிர்வாணமாக நடிக்கவே இல்லை. அது ஒரு ட்ரிக் தான் என்று கூறியிருக்கிறார் பிரிகிடா. அது குறித்து அவர் கூறுகையில், அந்த நிர்வாண காட்சியில் நடிப்பதற்கு நான் குட்டியான ஒரு ஆடை அணிந்திருந்தேன். அது எலாஸ்டிக் மாதிரி இருக்கும். அதை மேலே இழுத்து விட்டால் அந்த உடை அணிந்து இருப்பதே தெரியாது. அது ஒரு ட்ரிக் தான். அந்த காட்சியில் நடிப்பதற்கு நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். 40, 50 நாட்களாக அந்த உடையை அணிந்து கொண்டே ரிகர்சல் பார்த்தேன். இன்னும் சொல்லப்போனால் அப்படி நடிப்பதை விட அந்த உடையை அணிந்து நடித்தது தான் ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால் இரவின் நிழல் படத்தில் நான் நிர்வாணமாக நடித்ததாக சொல்ல முடியாது. எலாஸ்டிக் உடை அணிந்து செய்த ஒரு மேஜிக்தான் அது என்று கூறியிருக்கிறார் பிரிகிடா.