சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை போட்ட நீதிமன்றம்! | தகுதிக்கு உரிய சம்பளம் கேட்க தயங்குவதில்லை! - சொல்லுகிறார் பிரியாமணி | பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த தரமான பாடலுடன் வெளிவந்த “தங்கை” திரைப்படம் | 'பைசன்' படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | ஆதங்கத்துடன் புலம்பும் முகமூடி நடிகை | நடிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நடிகை | மலையூரு நாட்டாமை மனச காட்டு பூட்டாம..: ‛டூரிஸ்ட் பேமிலி' கமலேஷ் | அனுபமாவின் அனுபவம் | 59 நாட்களில் தமிழ் கற்றேன்: ‛செம்பருத்தி பூ' ஸ்வாதி | நான் ஏன் பிறந்தேன், முத்து, மார்கன் - ஞாயிறு திரைப்படங்கள் |

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் வாத்தி. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் சம்யுக்தா மேனன் நாயகியாக நடிக்கிறார். ஜிவி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் ஜூலை 28ம் தேதியான நாளை தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு மாலை 6:00 மணிக்கு வாத்தி படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இந்த டீசரோடு வாத்தி படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் கொடுக்கும் இந்த பிறந்தநாள் ட்ரீட்டை வரவேற்க அவரது ரசிகர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இதனிடையே இன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். தனுஷ் கல்லூரி விரிவுரையாளராக நடிக்கிறார்.
இயக்குனர் வெங்கி அட்லூரி கூறும்போது, “இந்த படத்தில் தனுஷ் ஒரு விரிவுரையாளராக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் இந்த படம் கல்வி அமைப்பை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பில் தனுஷின் உழைப்பும் அர்ப்பணிப்பும் உண்மையிலேயே நம்பமுடியாத ஒன்று. ஜி.வி பிரகாஷின் இசை யுவராஜின் ஒளிப்பதிவு இரண்டுமே இந்த படத்தின் மிக முக்கியமான அம்சங்களாக அமையும்” என்கிறார். ‛வாத்தி' படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.