பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு | விமான நிலையத்தில் தடுமாறி விழுந்த விஜய் | பிளாஷ் பேக் : இயக்கத்தில் தோற்ற யூகி சேது | பிளாஷ்பேக் : தோல்வி படத்தை வெற்றிப்படமாக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் |

'தி லெஜன்ட்' என்ற படத்தின் மூலம் சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள் சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தமிழ் சினிமா உலகில் ஐம்பது வயதுக்கும் மேற்பட்ட ஒரு நடிகர் கதாநாயகனாக அறிமுகமாவது இதுவே முதல் முறையாக இருக்கலாம். தமிழில் மட்டுமல்ல, ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் நாளை(ஜூலை 28) வெளியாகிறது.
பிரபல விளம்பரப் பட இயக்குனர்களும், அஜித் நடித்த 'உல்லாசம்' மற்றும் விக்ரமாதித்யா, ஷெரின், காயத்ரி ரகுராம் நடித்த 'விசில்' படத்தையும் இயக்கிய ஜேடி - ஜெர்ரி இப்படத்தை இயக்கியுள்ளார்கள். சுமார் 19 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு அவர்கள் இப்படத்தை இயக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
ஒரு ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்காக துபாய், மும்பை, ஐதராபாத் என பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தியுள்ளார் சரவணன். ஆனால், சென்னையில் மட்டும் நடத்தவில்லை. இசை வெளியீட்டுடன் நிறுத்திக் கொண்டார். மற்ற முன்னணி நடிகர்களின் படங்களைப் போல இப்படத்திற்கும் நாளை அதிகாலை 4 மணி காட்சி, 8 மணி காட்சி ஆகியவை நடக்கின்றன. இது தமிழ் திரையுலகத்தினரை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.