''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தின் ஓடிடி உரிமையை விற்கும் போது ஹிந்தி உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திற்கும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய உரிமையை 'ஜீ 5' நிறுவனத்திற்கும் விற்றார்கள்.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள பதிப்புகள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்திலும் நேற்று முதல் தனது ஒளிபரப்பை ஆரம்பித்தது. முதலில் ஜீ 5 நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இந்த நான்கு மொழி உரிமைகளும் மற்றுமொரு போட்டி நிறுவனத்திற்கும் மாறியது குறித்து திரையுலகில் அதிர்ச்சியும் சர்ச்சையும் எழுந்தது.
முதலில் உரிமையை வாங்கிய ஜீ 5 நிறுவனம் தான் தனது உரிமைகளை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கும் 'ஷேர்' செய்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த 'ஷேர்' உரிமை விற்பனை மூலம் அந்த நிறுவனம் மேலும் சில பல கோடிகளைப் பெற்றுள்ளதாம். இந்த 'ஷேர்' உரிமை விற்பனையால் படத்தின் தயாரிப்பாளருக்கு எந்த வருமானமும் இல்லையாம்.
எனவே, இனி வரும் காலங்களில் ஓடிடி உரிமைகளுக்காகப் போடப்படும் ஒப்பந்தங்களில் சில மாற்றங்களைச் செய்தாக வேண்டும் என தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளார்களாம். அப்படி மாற்றி விற்கும் போது தயாரிப்பாளர்களுக்கும் வருமானம் வரும் வகையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என பல தயாரிப்பாளர்கள் பேசி வருகிறார்களாம்.