நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் | ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா | சர்ச்சையில் சிக்கிய விஜய்யின் 'லியோ' படத்தின் புரோமோ வீடியோ | நடிகர்களை தலைவர் என்று அழைப்பது நெருடலாக உள்ளது - வெற்றிமாறன் கருத்து | உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வரலட்சுமி சரத்குமார் | மனவருத்தம் நீங்காமலே மறைந்துவிட்டார் வாணி ஜெயராம் ; இசையமைப்பாளர் கோபி சுந்தர் வருத்தம் | மகன் திருமணத்தை ஒன்றிணைந்து நடத்திய பிரியதர்ஷன் - லிசி | மோசடி வழக்கில் வில்லன் நடிகர் பாபுராஜ் கைது |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி சீனியர் இசையமைப்பாளர்களில் ஒருவர் கீரவாணி. 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் சமீபத்தில் அவர் இசையமைத்து வெளிவந்தவை. தமிழில் மரகதமணி என்ற பெயரில் சில படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
நேற்று அவர் இசையமைப்பாளர் அனிருத்தைப் பாராட்டி ஒரு பதிவிட்டுள்ளார். “டான்' படத்தில் இடம் பெற்றுள்ள 'பே' பாடல் போதை தரக் கூடியது. அனிருத் எப்போதுமே புதுமையானவர்,” எனக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அனிருத், “லவ் யூ சார்” என நன்றி தெரிவித்துள்ளார்.
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விக்னேஷ் சிவன் எழுதி, ஆதித்யா ஆர்கே பாடியுள்ள பாடல் தான் 'பே'. சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் இந்த ஆதித்யா. சினிமாவில் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கும் மீரா கிருஷ்ணனின் மகன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அரை இறுதியில் வெளியேற்றப்பட்டவர். இருப்பினும் இந்த 'பே' பாடல் அவரை சினிமா புகழின் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. தெலுங்கிலும் இந்தப் பாடலை ஆதித்யாவே பாடியுள்ளார்.
'பே' பாடலின் லிரிக் வீடியோ யு டியூபில் 47 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதன் வீடியோ பாடல் 10 மில்லியன் பார்வைகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 'டான்' படத்தில் அனிருத் இசையில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே ஹிட்டாகி படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது.