'பைசன்' படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | ஆதங்கத்துடன் புலம்பும் முகமூடி நடிகை | நடிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நடிகை | மலையூரு நாட்டாமை மனச காட்டு பூட்டாம..: ‛டூரிஸ்ட் பேமிலி' கமலேஷ் | அனுபமாவின் அனுபவம் | 59 நாட்களில் தமிழ் கற்றேன்: ‛செம்பருத்தி பூ' ஸ்வாதி | நான் ஏன் பிறந்தேன், முத்து, மார்கன் - ஞாயிறு திரைப்படங்கள் | மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் |

பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா ஆகியோர் நடித்து 2011ம் ஆண்டு வெளியான படம் 'அவன் இவன்'. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றவர் ராமராஜ். அதன்பிறகு சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேல சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இவர், கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின் சினிமாவுக்கு வந்தார்.
இந்நிலையில் 72 வயதாகும் இவர் கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.