சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
லீனா மணிமேகலை இயக்கியுள்ள காளி என்கிற ஆவணப்படத்தின் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், அந்த போஸ்டரில் காளி வேடம் போட்டிருந்த பெண் ஒரு கையில் ஓரினச்சேர்க்கையாளரின் கொடியும், மற்றொரு கையில் சிகரெட்டும் பிடித்தபடி போஸ் கொடுத்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த போஸ்டர் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி அவரை கைது செய்ய வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்தார்கள். ஆனால் அதையடுத்து எந்த மிரட்டலுக்கும் நான் பயப்பட மாட்டேன் என்று பதில் கொடுத்த லீனா மணிமேகலை, சிவன் - பார்வதி வேடமணிந்த இருவர் புகை பிடிக்கும் போட்டோவை மீண்டும் வெளியிட்டு இன்னொரு அதிர்ச்சியை கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் அவர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஹிந்து கடவுளை இழிவுபடுத்தியதற்காக லீனா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். இதையடுத்து லீனா மணிமேகலை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதி சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.