சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

மலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி தமிழில் ஆக் ஷன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கு, மலையாளத்திலும் நடிக்கிறார். கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய்பல்லவி முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‛கார்கி'. இந்த படத்தில் தயாரிப்பாளராக இணைந்துள்ளார் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி.
இப்பட விழா சென்னையில் நடந்தது. அப்போது பேசிய ஐஸ்வர்ய லட்சுமி, ‛‛இந்த படம் தாமதம் ஆனது பற்றி கூறியபோது மேடையில் கண்கலங்கினார். அவரை சாய்பல்லவி, கவுதம் ஆகியோர் சமாதானம் செய்தனர்.
சாய்பல்லவி பேசும்போது, இந்த படம் 3 ஆண்டுகளாக உருவானது. இந்த கதை உருவாக்கத்தில் இருந்தே இந்த படத்துடன் பயணிக்கிறார் ஐஸ்வர்ய லட்சுமி. அதனால் தான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டார் என்றார். மேலும் இயக்குனர் கவுதம் கூறுகையில் இந்த படத்திற்கு நிறைய நண்பர்கள் உதவி செய்தனர். அதில் முதல்நபர் ஐஸ்வர்ய லட்சுமி தான். இந்த படத்திற்காக தான் சம்பாதித்த பணத்தை கொடுத்தார் என்றார்.
தொடர்ந்து பேசிய ஐஸ்வர்ய லட்சுமி, ‛‛கார்கி படம் சாய்பல்லவி இல்லாமல் சாத்தியமில்லை. இந்த படத்திற்காக உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் நன்றி'' என்றார்.




