ஆக., 31க்கு தள்ளிப்போன ‛கோப்ரா' | பாஜக-வில் விரைவில் இணைய உள்ள நடிகை ஜெயசுதா | புஷ்பா 2 : பாடல் இசைக்கோர்ப்பு வேலைகள் ஆரம்பம் | நயன்தாரா திருமண நிகழ்வு, டாகுமெண்டரியாக வருகிறது… | அதிதி ஷங்கரை கவர்ந்த தமிழ் ஹீரோ | நியூயார்க்கில் நடைபெறும் சுதந்திர தின பேரணியில் அல்லு அர்ஜுன் | சந்திரமுகி 2 : முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | ராஜு முருகன் படத்திற்காக கெட்டப்பை மாற்றும் கார்த்தி | கமல் - உதயநிதி இணையும் படத்தை இயக்கும் பிரசாந்த் முருகேசன் | கிளாமர் இமேஜ் மாறவேண்டும்: யாஷிகா விருப்பம் |
தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று சினிமாவில் கால் பதிக்க போராடிக்கொண்டிருப்பவர் நடிகர் ப்ரஜின். இவர் தனது சக தோழியான சாண்ட்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாண்ட்ராவும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் சில காலங்கள் நடித்துவந்தார். அதன்பின் அவர் பெரிதாக திரையில் தோன்றவில்லை. இந்த க்யூட்டான ஜோடிக்கு மித்ரா, ருத்ரா என அழகான இரட்டை குழந்தைகளும் உள்ளது.
இந்நிலையில் பல நாட்களாக சாண்ட்ராவை யாரும் திரையிலோ, சோஷியல் மீடியாக்களிலோ பார்க்காத நிலையில் அவரது புகைப்படத்தை ப்ரஜின் பகிர்ந்துள்ளார். அதில், 'இரட்டை குழந்தைகளின் அம்மா காபியுடன் ரிலாக் செய்து கொண்டிருக்கிறார்' என கேப்ஷனும் போட்டுள்ளார். சாண்ட்ராவின் புகைப்படத்தை நீண்ட நாட்கள் கழித்து பார்த்த வீஜே தியா மேனனும் 'நீண்ட நாட்கள் கழித்து உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி சேச்சி' என கமெண்ட் அடித்துள்ளார். அதுபோல் ரசிகர்கள் பலரும் சாண்ட்ராவை நலம் விசாரித்து வருகின்றனர்.