மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

கடந்த மாதம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து ஹனிமூன் சென்று திரும்பினர். தற்போது ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. அதேபோல் அஜித் நடிக்கும் 62வது படத்தின் ஆரம்ப கட்டப் பணிகளை விக்னேஷ்சிவனும் தொடங்கி இருக்கிறார். விக்னேஷ் சிவன் தனது காதலராக இருந்தபோது அவருக்காக பிரம்மாண்ட வீடு ஒன்றை திருமண பரிசாக வழங்க இருந்தார் நயன்தாரா. இந்த வீட்டில் தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம் ஆகியும் இடம் பெறப்போகிறது. இவற்றை நவீன தொழில்நுட்பத்துடன் அமைப்பதற்காக மும்பையில் ஷாருக்கான் போன்ற பிரபலங்களின் வீடுகளில் பணிபுரிந்த நிறுவனத்தை சென்னைக்கு அழைத்திருக்கிறார் நயன்தாரா. அந்த வகையில், இந்த புதிய வீட்டின் உள்புற வேலைக்களுக்காக மட்டுமே பல கோடி ரூபாய் வரை அவர் பட்ஜெட் போட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வேலைகள் முடிந்ததும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் அந்த புதிய வீட்டில் குடியேறப்போகிறார்கள்.