2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி ,ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார் உள்பட பலர் நடித்து வரும் படம் பொன்னியின் செல்வன். சரித்திர கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் முதல் பாகம் வரப்போகிற செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர உள்ளது. அதனால் தற்போது படத்தின் பிரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சில தினங்களுக்கு முன்பு ‛‛வருகிறான் சோழன்'' என இப்படத்தின் பிரமோஷனை துவங்கினர். ஏற்னகவே விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா ஆகியோரின் போஸ்டர்கள் வெளியாகின.
இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் வேடத்தில் விக்ரம் நடித்திருப்பதாக அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர். மாஸாக வெளியாகியுள்ள இந்த போஸ்டரை விக்ரமின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.