இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை தழுவி மாதவன் இயக்கி, அவரது வேடத்தில் நடித்துள்ள படம் ‛ராக்கெட்ரி - தி நம்பி எபெக்ட்'. சிம்ரன் நாயகியாக நடித்துள்ளார். இந்தபடம் கடந்தவாரம் வெளியாகி விமர்சர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்து, பாராட்டி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : ‛‛ ராக்கெட்ரி திரைப்படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும், குறிப்பாக இளைஞர்கள். நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி, விளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்மபூஷண் நம்பி நாராயணன் வரலாறை மிகத் தத்ரூபமாக நடித்து, படமாக்கி, இயக்குனராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குனர்களுக்கு இணையாக தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன். இப்படி ஒரு படத்தை கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும், பாராட்டுகளும்.
இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மாதவன் நன்றி
ரஜினியின் இந்த பாராட்டிற்கு நன்றி தெரிவித்துள்ளார் மாதவன். என்ன சொல்வது என்றே தெரியவில்லை, சொல்ல வார்த்தைகள் இல்லை. நன்றி ரஜினி சார் என தெரிவித்துள்ளார் மாதவன்.