ஆக., 31க்கு தள்ளிப்போன ‛கோப்ரா' | பாஜக-வில் விரைவில் இணைய உள்ள நடிகை ஜெயசுதா | புஷ்பா 2 : பாடல் இசைக்கோர்ப்பு வேலைகள் ஆரம்பம் | நயன்தாரா திருமண நிகழ்வு, டாகுமெண்டரியாக வருகிறது… | அதிதி ஷங்கரை கவர்ந்த தமிழ் ஹீரோ | நியூயார்க்கில் நடைபெறும் சுதந்திர தின பேரணியில் அல்லு அர்ஜுன் | சந்திரமுகி 2 : முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | ராஜு முருகன் படத்திற்காக கெட்டப்பை மாற்றும் கார்த்தி | கமல் - உதயநிதி இணையும் படத்தை இயக்கும் பிரசாந்த் முருகேசன் | கிளாமர் இமேஜ் மாறவேண்டும்: யாஷிகா விருப்பம் |
சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் சுழல் வெப் தொடர் மற்றும் தியேட்டர்களில் வெளியாகி உள்ள ராக்கெட்ரி படத்தில் சாம் சி.எஸ்சின் பின்னணி இசை குறித்து பரவலாக பேசப்படுகிறது.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் பல ஹிட் பாடல்கள் கொடுத்திருந்தாலும் பின்னணி இசை பற்றி பேசப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு அமைகிற படம் எல்லமே கொலை, கொள்ளை நிறைந்த டார்க் ஜானர் படங்களாக இருக்கிறது. அவற்றில் பாடல்களை விட பின்னணி இசைக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும்.
ஆனால் பாடலின் வெற்றியின் மூலமே ஒரு இசை அமைப்பாளர் கவனிக்கப்படுகிறார், கொண்டாடப்படுகிறார் என்பதுதான் இன்றையநிலை. அந்த வகையில் எனக்கு வருத்தம் உண்டு. இப்போதுள்ள நவீன டெக்னாலஜியை கொண்டு ஒரு உருப்படாத பாடலை கூட 50 லட்சம் வரை செலவு செய்து செயற்கையாக ஹிட்டாக்கி விட முடியும். அதை செய்ய நான் தயாராக இல்லை. பாடலுக்கான வாய்ப்புகள் வரும்போது நானும் கொண்டாடப்படுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்கிறார் சாம் சி.எஸ்.