இதுதான் மெகா கூட்டணி : 32 ஆண்டுளுக்கு பின் இணைந்து நடிக்கும் ரஜினி, அமிதாப்? | விஜய் தேவரகொண்டா மீது குற்றச்சாட்டிய பிரபல நடிகை | கடினமான சோதனை : கஜோல் எடுத்த முடிவு | மீண்டும் இணைந்த டைரி பட கூட்டணி | மாவீரன் படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் நிறுவனம் | ‛வேட்டையாடு விளையாடு' ரீ ரிலீஸ் அப்டேட் | தமன்னாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு | ஜனாதிபதியை சந்தித்த சமந்தா | ராமர் வேடத்தில் நடித்த பிரபாஸுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ் | வட சென்னை 2 : சந்தோஷ் நாராயணன் கொடுத்த அப்டேட் |
திருக்கடையூர் கோயிலில் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகர், ஆயுஷ் ஹோமம் வளர்த்து சிறப்பு வழிபாடு நடத்தினார். அவருடன் அவரது மனைவி ஷோபாவும் பங்கேற்றார்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவரது மனைவி ஷோபா. இவர்களது மகனான விஜய் இன்றைக்கு தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகராக வலம் வருகிறார். எஸ்ஏசி தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நேற்று தனது 80வது பிறந்தநாளை மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆயுஷ் ஹோமம் வளர்த்து காலசம்கார மூர்த்தியை வழிபாடு செய்தால் ஆயுள் விருத்தியாகும் என்பது ஐதிகம். இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60 வயது எழுபது எண்பது வயது பூர்த்தி அடைந்தவர்கள் கோயில் சிறப்பு வழிபாடு செய்து மணிவிழா சதாபிஷேக விழா செய்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில் திரைப்பட இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு தனது மனைவி ஷோபாவுடன் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்து ஆயுள் விருத்தி ஹோமம் செய்து காலசம்ஹார மூர்த்தி சுவாமி அம்பாள் சன்னதியில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். தனது மகன் விஜய் பெயரில் அர்ச்சனையும் செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.