நானி - சாய்பல்லவி படம் ஆஸ்கருக்கு பரிந்துரை | எப்படி இருந்த கீர்த்தி இப்படி | கனடாவிலிருந்து வந்த பாடகி | வருகிறான் ‛சோழா சோழா' | குடும்பத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த சூரி | திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்த தனுஷ் | ‛லால் சிங் தத்தா' படத்தை இணையதளத்தில் வெளியிட்ட இரண்டு பேர் கைது | ஹிந்தியில் அறிமுகமாகிறார் அனுபமா பரமேஸ்வரன் | ஆர்ஆர்ஆர் படத்திற்கு 99 சதவீதம் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு : அனுராக் காஷ்யப் கணிப்பு | கிர்த்தி ஷெட்டிக்கு இரண்டாவது அதிர்ச்சி |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் சரித்திரப் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி இசை மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் ஏஆர் ரஹ்மானுக்குச் சொந்தமான எஎம் ஸ்டுடியேவில் இப்படத்தின் பின்னணி இசை வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. பிரபல டிரம்ஸ் இசைக் கலைஞர் சிவமணி அது பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரும் சக இசைக் கலைஞர்கள் சிலரும் அதற்கான வேலையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு அற்புதமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவின் பின்னணியில் திரையில் 'வந்தியத்தேவன்' கார்த்தியின் புகைப்படம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. இந்த வருடம் செப்டம்பர் 30ம் தேதி படம் வெளியாகிறது. இந்தப் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.