'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் |
திகில் படங்கள்தான் இப்போது குறைந்த பட்ஜெட்டில் எடுக்க முடியும். ஒரு டிஜிட்டல் கேமரா, கவர்ச்சி காட்ட நான்கைந்து பெண்கள், சண்டைபோட இரண்டு ஆண்கள், பயந்து சாக இரண்டு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் இவற்றோடு காட்டுக்குள் போனால் படத்தை எடுத்து முடித்து விட்டு வந்து விடலாம். பின்னர் ரீ-ரெக்கார்டிங்கில் பயமுறுத்தி படத்தை வெளியிட்டு விடலாம் இப்படி பல படங்கள் தயாராகி வருகிறது. அவற்றில் ஒன்றுதான் "என்னாச்சு".
ஹீரோவின் நிச்சயதார்த்ததிற்காக அவனது மலைக்கிராமத்துக்குச் செல்லும் நண்பர்கள். நிச்சயிக்கப்பட்ட பெண்ணோடு சொந்தக்காரர்கள், ஊர்க்காரர்கள் பேச்சை மீறி காட்டுக்குள் சுற்றுலாச் செல்கிறார்கள். அவர்கள் சந்திக்கும் திகில் அனுபங்களை படமாக எடுத்திருக்கிறார்கள். இஸ்மாயில், விவிந்த் என்ற இரண்டு ஹீரோக்கள், பூஜா, மேகாதானி என்ற இரண்டு ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். பல குறும்படங்களை இயக்கிய ஸ்ரீமணி இயக்குகிறார். தேனி, திண்டுக்கல், சிறுமலை பகுதி மலைக்காடுகளில் படம் எடுத்து திரும்பி வந்திருக்கிறார்கள். அடுத்த மாதம் டிஜிட்டலில் தியேட்டரில் மிரட்டப் போறாங்களாம்.