என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

தெலுங்கில் அனு ராகவபுடி என்பவர் இயக்கத்தில் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்கூர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சீதா ராமம். இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், காஷ்மீர் ராணுவத்தில் பணிபுரியும் துல்கர் சல்மான் எனக்கு யாருமே இல்லை என்ற தகவலை வானொலி மூலம் தெரிவிக்கிறார். அதையடுத்து அவருக்கு ஏராளமான கடிதங்களை பொதுமக்கள் எழுதுகிறார்கள். அதில், சீதா என்ற ஒரு பெண் நீங்கள் தாலி கட்டிய மனைவி நான் இருக்கிறேன் என்று ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தை படித்துவிட்டு ஆச்சர்யமடையும் துல்கர் சல்மான், சீதா நீ யார்? என்று கேட்கிறார். அத்துடன் இந்த டீசர் முடிகிறது. விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.