இதயம் முரளி ஆக மாறிய அதர்வா | ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி புதிய வெப் தொடர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியீடு | விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் | லாபத்தில் நுழைந்த 'தண்டேல்' | மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' | சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் | லூசிபர் 2ம் பாகத்திலும் அதிக முக்கியத்துவம் : நடிகை நைலா உஷா பெருமிதம் | மே மாத ரிலீஸுக்கு தயாராகும் பஹத் பாசிலின் 'ஓடும் குதிர சாடும் குதிர' | அதை மஞ்சுவாரியரிடமே போய் கேளுங்கள் ; நடிகை பார்வதி காட்டம் |
அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'தேஜாவு' படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகை ஸ்மிருதி வெங்கட் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார் . முக்கிய கதாபாத்திரங்களில் மதுபாலா, காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. அருள்நிதி இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் வருகின்ற ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.