‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் | கதை திருடும் சினிமா இயக்குனர்கள்: எழுத்தாளர் ஆர்னிகா நாசர் ஆவேசம் | காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் |
'கயல்' தொடர் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. இதில், சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக் மற்றும் முத்துராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் தற்போது 'தேவி' என்ற கதாபாத்திரத்தை வைத்து தான் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. தேவி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ரவிசந்திரன் என்ற நடிகை நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யா, 'கயல்' சீரியலில் அமைதியாக அப்பாவியாக நடித்து வந்தாலும், ரியாலிட்டி ஷோக்களில் ஐஸ்வர்யா கலந்து கொண்டால் அந்த நிகழ்ச்சியையே கலகலப்பாகி விடுவார். கயலுக்கு அடுத்தப்படியாக இளைஞர்கள் சைட் அடிப்பது தேவியை தான். இப்போது தான் தேவிக்கு இண்ஸ்டாகிராமிலும் ரசிகர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், மாடர்ன் டிரெஸ்ஸில் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமை தெறிக்கவிட்டு வருகிறது. இளைஞர்களும் ஐஸ்வர்யாவின் அழகை பார்த்து ஹார்டின்களை மலை போல் குவித்து வருகின்றனர்.