‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்தாலும், சில நடிகைகள் தங்களது தனி முத்திரையை பதித்துள்ளார்கள். அப்படிப்பட்டவர்களில் ஜெனிலியாவும் ஒருவர். தமிழில் 'பாய்ஸ்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அதன்பின் “சச்சின், சென்னைக் காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம்” ஆகிய படங்களில் நடித்தார். அவற்றில் 'சச்சின்' படத்தின் ஷாலினி கதாபாத்திரமும், 'சந்தோஷ் சுப்பிரமணியம்' படத்தின் ஹாசினி கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.
2012ம் ஆண்டில் மறைந்த மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வரான விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனான ரித்தேஷ் தேஷ்முக்கைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள்.
திருமணத்திற்குப் பிறகு அதிகம் நடிக்காமல் இருந்த ஜெனிலியா தற்போது மராத்தி, ஹிந்தி ஆகியவற்றில் தலா ஒரு படத்திலும், தெலுங்கு, கன்னடத்தில் தயாராகும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜெனிலியா நேற்று மஞ்சள் நிற ஆடையுடன் சில புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அவற்றைப் பார்த்தால் ஜெனிலியாவை யாரும் இரண்டு மகன்களுக்கு அம்மா என்று சொல்ல மாட்டார்கள். 'சச்சின்' படத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார்.
இப்போது கூட மீண்டும் தமிழுக்கு வந்து விஜய் ஜோடியாக நடித்தாலும் ரசிகர்கள் ரசிப்பார்கள்.