அஜித் எடுத்த அதிரடி முடிவு | மீண்டும் போலீஸாக மிரட்ட வரும் விஜய் ஆண்டனி | ஓடிடி ரிலீஸ் : ஹிந்தி சினிமாவை பின்பற்றுமா தமிழ் சினிமா ? | மோகன்லால் - ஜீத்து ஜோசப்பின் நேரு ரிலீஸ் தேதி அறிவிப்பு | அதிக உணவுகளை சூர்யா ஆர்டர் பண்ணுவது ஏன்? ஜோதிகா வெளியிட்ட சுவாரசிய தகவல் | ஜெயம் ரவியின் ‛காதலிக்க நேரமில்லை' | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து : 'கமா' போட்ட சசிகுமார் | ரஜினி 171வது படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் - ஜீவன்? | ஒரேநாளில் மோதிக்கொள்ளும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் நடித்த படங்கள் | அப்போ தெரியலையா? வனிதாவை வெளுத்து வாங்கிய கஸ்தூரி |
படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் எப்பொழுதும் ஜாலியாக சுற்றுலா கிளம்பிவிடும் நடிகைகள் பட்டியலில் மாளவிகா மோகனன் முதல் ஆளாக இருக்கிறார். மாலத்தீவு மற்றும் வெளிநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்த மாளவிகா, சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தடோபா வனவிலங்கு சரணாலயத்திற்கு தனது தோழிகள் இருவருடன் விசிட் அடித்து சில நாட்களாக காட்டிற்குள் வனவிலங்குகளை நேரில் பார்ப்பதற்காக தினசரி சபாரி மேற்கொண்டிருந்தார்.
இந்தநிலையில் இந்த பயணத்தின் கடைசி நாளாக இவர்கள் காட்டில் பயணம் மேற்கொண்டபோது நீண்ட நேரமாக எந்த ஒரு மிருகமும் தட்டுப்படவில்லை. இதனால் சற்றே அப்செட் ஆன மாளவிகாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் விதமாக அவர்கள் சென்ற பாதையில் சிறுத்தை ஒன்று இவர்கள் வரவுக்கு காத்திருந்தது போலவே அமர்ந்திருந்ததாம். உடனே தனது கேமராவை எடுத்து சிறுத்தையை புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார் மாளவிகா.
அந்த சிறுத்தை இவர்களை நோக்கி வந்ததும் மாளவிகாவுக்கு சில நொடிகள் மூச்சே ஸ்தம்பித்து போனது போன்ற உணர்வு ஏற்பட்டதாம். கிட்டத்த இப்படியே பத்து நிமிடங்கள் கழிந்தபிறகு சிறுத்தை இவர்களை பெரிதாக கண்டுகொள்ளாமல் தான் வந்த பாதை வழியே திரும்பி சென்ற பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட்டனராம் மாளவிகாவும் அவரது தோழிகளும்.