உண்மை கதையில் யோகி பாபு | வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி | மே 1 : சினிமா ரசிகர்களுக்காக பல வெளியீடுகள் | கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது? | ஓடிடி.,யில் விலை போகாத 'கேங்கர்ஸ்' | வேலை நாட்களில் எடுபடாத விஜய்யின் சச்சின் |
கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'விக்ரம்' படம் ஹிந்தி தவிர மற்ற மொழிகளிலும், மாநிலங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பிரபலங்களுக்கும் இப்படம் பிடித்திருக்கிறது.
கடந்த வாரம் படம் வெளியான அன்றே சினிமா பிரபலங்களுக்காக பிரத்யேகக் காட்சி ஒன்று நடைபெற்றது. அதில் பலரும் படத்தைப் பார்த்துப் பாராட்டினர். அதில் கலந்து கொள்ள முடியாவர்கள் தியேட்டர்களில் படத்தைப் பார்த்தார்கள்.
கமல்ஹாசனுடன் 'மன்மதன் அம்பு' படத்தில் ஜோடியாக நடித்த த்ரிஷா 'விக்ரம்' படத்தை இரண்டு முறை பார்த்திருக்கிறார். சென்னையில் உள்ள எஜிஎஸ் தியேட்டரில் தனது தோழிகளுடன் படத்தைப் பார்த்த த்ரிஷா, படத்தின் என்ட் டைட்டிலை வீடியோவாக எடுத்து எஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்திக்கு நன்றி தெரிவித்து 'ரவுண்ட் 2, விக்ரம்' என பயர் எமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.