பிளாஷ்பேக் : கதை நாயகனாக நடித்த மவுலி | பிளாஷ்பேக் : பர்மா அகதிகளின் கதை | ஷபானாவா இது... : குழம்பிய ரசிகர்கள் | சின்னத்திரையில் பாண்டியராஜன் | எப்போ கல்யாணம் பண்ணுவீங்க? அமீர் - பாவ்னிக்கு ரசிகர்கள் கேள்வி | 'டிராகான் Vs நி.எ.மே.எ.கோபம்' - இளைஞர்களைக் கவரப் போவது யார்? | ஒரு மணி நேரத்திலேயே பொய் பேசிய கயாடு லோஹர் | கன்னடர்களின் கோபத்திற்கு ஆளான ராஷ்மிகா மந்தனா | ஒன்பது படங்களில் ஒன்றாவது வசூலைக் குவிக்குமா ? | இசையமைப்பாளர் தமனுக்கு கார் பரிசளித்த பாலகிருஷ்ணா |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'விக்ரம்' படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. அங்கும் இப்படம் வெற்றி பெற்றுள்ளது.
தெலுங்கில் கடந்த நான்கு நாட்களில் இப்படம் 15 கோடியை வசூலித்துள்ளது. இப்படத்தின் தெலுங்கு உரிமை சுமார் 7 கோடிக்கு விற்கப்பட்டது. 15 கோடி ரூபாயை மொத்தமாக வசூலித்து தற்போது பங்குத் தொகையாக 7 கோடியை அளித்துள்ளது. இதன் மூலம் இப்படம் தற்போது லாபத்தில் சென்றுவிட்டது. இனி வசூலாகும் தொகை படத்தின் லாபக் கணக்கில் மட்டுமே சேரும்.
கேரளாவில் இப்படம் 18 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. கர்நாடகாவில் 11 கோடியை வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த மாநிலங்களிலும் இப்படம் வெற்றி பெற்றுள்ளது என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கிறார்கள். ஹிந்தியில் படத்தை சரியாக வெளியிடாத காரணத்தால் அங்கு மிகக் குறைவாக 3 கோடி வரையில் மட்டுமே வசூலித்துள்ளதாம். ஏற்கெனவே, ஹிந்தியில் பல வெற்றிகளைக் கொடுத்த கமல்ஹாசன் ஹிந்தியில் இப்படத்திற்காக சரிவர கவனம் செலுத்தவில்லை என்கிறார்கள்.