'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படத்தில் அனிருத் இசையில் அப்படத்தில் இடம் பெற்ற பாடல்களைக் காட்டிலும் அப்படத்தில் சில காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட இரண்டு பாடல்கள் தற்போது மிகவும் பிரபலமாகிவிட்டன.
படத்தின் முதல் அறிவிப்பு வீடியோவின் போதே 30 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'விக்ரம்' படத்தில் இளையராஜா இசையமைப்பில் இடம் பெற்ற 'விக்ரம்….விக்ரம்…' பாடலைப் பயன்படுத்தினார்கள். கடந்த வாரம் வெளிவந்த 'விக்ரம்' படத்தின் இடைவேளையின் போதும் அப்பாடல்தான் பின்னணியில் ஒலித்தது.
அது மட்டுமல்லாமல் படத்தின் ஆரம்பக் காட்சியில் குடித்துவிட்டு காரில் கமல்ஹாசன் சென்று கொண்டிருக்கும் போது அவரது காலில், 'சக்கு…சக்கு…வத்திக்குச்சி…' என்ற பாடல் ஒலிக்கும். அது எந்த படத்தின் பாடல் என ரசிகர்கள் தேடிப் பிடித்து டிரென்ட் ஆக்கி வருகிறார்கள்.
அப்பாடல் 1995ம் ஆண்டு வேலு பிரபாகரன் இயக்கத்தில், ஆதித்யன் இசையமைப்பில், அருண்பாண்டியன், ரோஜா, ராதாரவி மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'அசுரன்' படத்தில் இடம் பெற்ற பாடல். அப்பாடலை பிறைசூடன் எழுத ஆதித்யன், சுஜாதா பாடியிருந்தனர். அப்பாடலுக்கு நடன இயக்குனர் கல்யாண், மன்சூரலிகான், ரோஜா ஆகியோர் நடனமாடியிருப்பார்கள். அன்றைய கால கட்டத்திலேயே மிகவும் ஹிட்டான பாடல் அது.
'விக்ரம்' படம் மூலம் மீண்டும் பேசப்படும் அப்பாடலை மேலும் பேச வைத்துள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். அது குறித்து அவர் கூறுகையில், “ஆதித்யன் இசையமைப்பில் என்னால் புரோக்ராம் செய்யப்பட்ட பெப்பியான வின்டேஜ் பாடல் இப்போது வைரலாகி வருவது மகிழ்ச்சி. அப்பாடல் 1995ம் ஆண்டு விஜிபி ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்ட பாடல்,” எனப் பதிவிட்டுள்ளார்.
காலம் கடந்தும் இப்படி சில பாடல்கள் பேசப்படுவது அந்தப் பாடலை உருவாக்கியவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும்.