18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி |
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, அது இது எது, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலம் ஆனவர் புகழ். தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். மிஸ்டர் சூ கீப்பர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் ஆகியிருக்கிறார். இதுதவிர வெளியூர்களில் நடக்கும் காமெடி ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். புகழ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்று விளம்பரம் செய்து பலர் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து புகழ் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது : நான் ஈரோடு, மதுரை உள்ளிட்ட ஊர்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்வதாக கூறி, எனது பெயரை நிறைய பேர் தவறாக பயன்படுத்துகின்றனர். அது மட்டுமில்லாமல், எனது பெயரை உபயோகித்து அவர்கள் பணம் வசூலிப்பதாகவும் தெரிய வருகிறது.
தயவு செய்து யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம். யாரையும் நம்பவும் வேண்டாம். நான் வருவதாக இருந்தால், நானே வீடியோ வெளியிடுவேன். நான் தற்போது படப்பிடிப்புக்காக பிலிப்பைன்ஸில் இருப்பது அனைவருக்கும் தெரியும். தயவு செய்து யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். நான் வருவதாக இருந்தால், நானே உறுதி செய்கிறேன். என்று அந்த வீடியோவில் பேசி உள்ளார்.