இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி |
கமல்ஹாசன் நடிப்பில் 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் படம் விக்ரம். இந்த படத்தின் புரமோசனுக்காக பல இடங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார் கமல். பட புரமோசனின் ஒரு பகுதியாக மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியை மோகன்லால் நடத்தி வருகிறார்.
மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரம் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய மோகன்லால், கமல்ஹாசனை இந்திய சினிமாவின் லெஜண்ட் என்று பாராட்டினார். நான் மோகன்லாலின் ரசிகன் என்று கமல் பேசியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல் "முழுநீள மலையாள திரைப்படத்தில் மீண்டும் நடிக்க ஆர்வமுடன் இருக்கிறேன். குறிப்பாக மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இப்போதுள்ள மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் ஆழமாக சிந்திக்கிறார்கள். அவர்களுடன் பணியாற்ற ஆவலாக இருக்கிறேன்" என்றார்.