அன்பானவரை இழந்து வாடுகிறேன் ; தவறான தகவலை பரப்பாதீங்க - மீனா | அவதார் 2 : கேட் வின்ஸ்லெட் லுக் அவுட் | வின்னர் 2 உருவாகிறது | 20 ஆண்டுகள் ; மாறாத மாதவன் - சிம்ரன் நெகிழ்ச்சி | அதே படம்... அப்பா இசையமைத்த மற்றொரு ஹிட் பாடலை பயன்படுத்திய யுவன் | கமலையும், மம்முட்டியும் இணைக்கும் விஸ்வரூபம் எடிட்டர் | திலீப்பின் பறக்கும் பப்பன் படத்துக்கு இசையமைக்கும் அனிருத் ? | எம்ஜிஆர் பட கதை... ரஜினியின் டைட்டில் ; அசத்தும் நயன்தாரா பட இயக்குனர் | நான் வில்லன் இல்லை ; கடுவா ரகசியம் உடைத்த விவேக் ஓபராய் | குஷ்பு தொடரில் புதிய ஹீரோ |
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று நான்கு நாட்களிலேயே 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்துள்ளது.. இதைத்தொடர்ந்து அவர் நடித்துள்ள அயலான் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்கள் தற்போது நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கத் துவங்கி உள்ளது போல சிவகார்த்திகேயனும் தற்போது நேரடி தெலுங்கு படமொன்றில் நடித்து வருகிறார். ஜதி ரத்னாலு திரைப்படம் புகழ் இயக்குனர் அனுதீப் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரிய ரிஷபோப்ஸ்கா நடிக்கிறார்.
தெலுங்கு படம் என்றாலும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தமிழ்நாட்டில்தான் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக காரைக்குடி பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்த நிலையில் கிட்டத்தட்ட 90% முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் காட்சி தற்போது புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் நடிக்கும் படப்பிடிப்பு நடைபெறுவதை அறிந்து ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டதால் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.