ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ராஜ்யசபா எம்.பி.யாக நியமனம் | ராஜ்யசபா எம்.பி.யாக இளையராஜா நியமனம் : பிரதமர், ரஜினி, கமல் வாழ்த்து | காமெடி கதையில் நடிக்கும் அனுஷ்கா | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு | கடுவாவுக்கு யு/ஏ சான்றிதழ் ; சிக்கலின்றி வெளியாகிறது | மாமன்னன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு | அடேங்கப்பா... 800 தியேட்டர்களில் வெளியாகும் 'தி லெஜண்ட்' | மீண்டும் பட தயாரிப்பில் களமிறங்கும் தனுஷ் | உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி” | சிரஞ்சீவி பெயரில் தவறு செய்த 'காட்பாதர்' குழு |
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் வீட்டில் இருந்து யானை தந்தங்கள் மீட்கப்பட்டது. வனத்துறையின் உரிய அனுமதி இல்லாமல் யானை தந்தங்கள் வைத்திருப்பது இந்திய வனபாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். இதனால் கேரள மாநில வனத்துறை மோகன்லால் மீது பெரும்பாபூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் கேரள அரசு மோகன்லால் உரிய அனுமதி முன்பே பெற்றுள்ளார் என்று கூறி அவர் மீதான வழக்கை வாபஸ் பெற நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதை எதிர்த்து பவுலோஸ் மற்றும் ஜேம்ஸ் மேத்யூ என்ற இரு சமூக ஆர்வலர்கள் முதலில் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து. இருவரும் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததோடு. பவுலோஸ் மற்றும் ஜேம்ஸ் மேத்யூவின் வாதங்களை கேட்ட பின்னர்தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும். என்று பெரும்பாவூர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. அதோடு இந்த விசாரணையை 3 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் காலக்கெடு விதித்தது. இதனால் இந்த யானை தந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.