சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் | 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர் | ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ் |

உதய மகேஷ் என்பவர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், அனஸ்வரா ராஜன், மேக்னா சுமேஷ், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் லக்கி - தி சூப்பர் ஸ்டார். இந்த படத்தை தியேட்டரில் வெளியிடாமல் வருகிற 20ம் தேதி நேரடியாக ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியிடுகிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியிடுகிறார்கள். இந்நிலையில் லக்கி தி சூப்பர் ஸ்டார் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்கள். ஒரு சிறிய நாய்க்குட்டி தொலைந்து போவதோடு ஒரு அரசியல்வாதியிடம் சிக்கிக் கொள்கிறது. அது அவரது கையில் கிடைத்ததில் இருந்து அவருக்கு பல அதிரடியான மாற்றங்கள் நடக்கிறது. இறுதியில் அந்த நாய்க்குட்டியை அந்த அரசியல்வாதியிடமிருந்து ஜி.வி .பிரகாஷ் குமார் எப்படி மீட்டெடுக்கிறார் என்பது குறித்த கதையில் இந்த படம் உருவாகி இருக்கிறது.