திருமண போட்டோக்களை சோசியல் மீடியாவில் இருந்து நீக்கிய சர்வானந்த் ; மீண்டும் ஒரு நட்சத்திர பிரிவு ? | அமெரிக்காவில் வெளியிடப்பட்ட தனது பட டிரைலர் வெளியீட்டில் காயத்ரி மந்திரம் உச்சரித்த வித்யுத் ஜம்வால் | என்னுடைய பழைய படங்களை இப்போது பார்க்கும்போது கண்கள் கலங்கும் ; மோகன்லால் | 17 வருடங்களுக்கு முன்பே கேட்ட 'பள்ளிச்சட்டம்பி' கதையில் கெஸ்ட் ரோலில் நடித்த பிரித்விராஜ் | முட்டுக்கட்டையால் 'அப்செட்'டில் நடிகை | முதல் படத்திலேயே கடனாளியான வாரிசு | 'தாய்கிழவி' ராதிகாவிற்கு தேசிய விருது: பாரதிராஜா உறுதி | 2027 டிசம்பரில் ரிலீசாகும் 'மகா அவதார் பரசுராம்' | 'கர' படத்தில் பிரித்விராஜ் நடிக்காதது ஏன்? இயக்குனர் விக்னேஷ் ராஜா விளக்கம் | சதீஷ் பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் சந்தானம்! |

நடிப்பு, இயக்கம் என மாறி மாறி பயணித்து வருகிறார் ஜிவி பிரகாஷ். தற்போது ‛லக்கி - தி சூப்பர் ஸ்டார்' என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அனஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்க, இயக்குனரும், நடிகருமான உதய் மகேஷ் இயக்கி உள்ளார். இதை கவிதாலயாவின் புஷ்பா கந்தசாமி தயாரித்துள்ளார்.
குழந்தைகளை கவரும் வகையில் இப்படம் உருவாகி உள்ளது. முதன் முறையாக இப்படி ஒரு படத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ளார். படத்தில் நாய் ஒன்றும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. இப்படம் உருவாகும்போதே ஓடிடிக்காக எடுக்கப்பட்டது. தற்போது படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீஸிற்கு தயாராகி உள்ளது. வரும் பிப்., 20ல் நேரடியாக ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.




