ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

நடிகர் திலகம் சிவாஜி பெரும்பாலும் அரசியல் படங்களில் நடித்ததில்லை. ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 'தமிழக முன்னேற்ற முன்னணி' என்ற கட்சியை தொடங்கியபோது தனது கட்சி கொள்கைகளை பிரச்சாரம் செய்யவும், எதிரிகளை அரசியல் ரீதியாக விமர்சிக்கவும் நடித்த படம் 'என் நாடு என் மக்கள்'
இந்த படத்தை சந்தானபாரதி இயக்கினார். சிவாஜியுடன் வடிவுக்கரசி, எஸ்.எஸ்.சந்திரன், நிழல்கள் ரவி, விஜயகுமார், வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன் நடித்தார்கள். சிவாஜியின் சொந்த நிறுவனமான சிவாஜி பிலிம்ஸ் தயாரித்தது. கங்கை அமரன் இசை அமைத்தார். அனந்தன் கதை எழுதினார். ஒரு நேர்மையான அரசியல்வாதி சட்டசபைக்குள் செல்லும் போது சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து உருவாகி இருந்தது.
கதையில் வலு இல்லாமல், வசனத்தில் அழுத்தம் இல்லாமல் வெறும் பிரச்சார படமாக அமைந்து விட்டதால் படம் பெரிய தோல்வியை சந்தித்தது.