'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜய் டிவியின் 'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிப்பு பயணத்தை தொடங்கியவர் நடிகை ஸ்யாமந்தா கிரண். தொடர்ந்து பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையில் பயணம் செய்வதில் அதிக ஆர்வமுள்ள ஸ்யாமந்தா கிரண் பெட்டி படுக்கையை பேக் செய்து கொண்டு தற்போது ஊர் சுற்ற கிளம்பிவிட்டார். சென்னை ஏர்போர்ட்டில் சூட்கேஸூடன் போஸ் கொடுத்துள்ள கிரண், 'உலகை சுற்ற எனக்கு வேண்டியதெல்லாம் சூட்கேஸ், பாஸ்போர்ட் தான்' என கூறி பிறந்தநாளை கொண்டாட சுற்றுலா செல்கிறேன் என தெரிவித்துள்ளார். தற்போதெல்லாம் சினிமா மற்றும் சீரியல் நடிகைகள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணம் செல்வது வாடிக்கையாகிவிட்ட நிலையில், அந்த லிஸ்ட்டில் இவரும் இணைந்து விட்டாரா? என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.