2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ஜிஎஸ் விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் 'ஓ 2'. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான்-தென்னிந்தியா படமாக ஓடிடி தளத்தில் வெளிவர உள்ளது.
இப்படத்தின் டீசர் இன்று(மே 16) வெளியிடப்பட்டது. கொச்சிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லும் ஒரு பேருந்து ஏதோ ஒரு பெரும் பள்ளத்தில் யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு விழுந்துள்ளது. 12 மணி நேரம் மட்டுமே அதில் உள்ளவர்கள் உயிருடன் இருக்க வேண்டிய நிலைமையில் அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை என்பதை டீசரைப் பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் உயிருடன் இருக்க ஆக்சிஜன் தேவை, அதனால்தான் படத்தின் பெயரையும் வேதியியல் குறியீடாக 'O2' என வைத்துள்ளனர்.
இந்த டீசர் வெளியான சில மணி நேரங்களில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவருடைய டுவிட்டர் பதிவில், “நம்ம ஊர்ல ஏன் வித்தியாசமா யோசிக்கிறதில்லனு ஆதங்கப்படறாங்கனு, நம்ம ஒரு கதைய தேடி எடுத்துட்டு வந்தா, பல பயலுவ இது எந்த கதையோட ரீமேக்குன்னு கேக்குறாங்க. உங்க டிசைனே புதுசா இருக்கே!! Why da?. #O2 - ஒரு விக்னேஷ் ஒரிஜனல், இத அவரே சொன்னாரு!!,” என கொஞ்சம் நக்கலாகவும், கோபத்துடனும் பதிவிட்டுள்ளார்.