2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா, தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 66வது படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். ராஷ்மிகா தனது தோழி ராகினியின் திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதோடு, அவரது திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அதிகாலை 4 மணிக்கு விமான நிலையத்திற்கு சென்றபோது அதற்கு முன்னதாகவே விமானம் சென்றுவிட்டதாக தெரிவித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா, அதன் பிறகு வந்த இன்னொரு விமானத்தின் மூலம் தோழியின் திருமணத்திற்கு சென்றதாகவும், சரியான நேரத்தில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். அதோடு எனது தோழி ராகினியின் 19 ஆண்டுகால நட்பில் எந்த மாற்றமும் இல்லை. ஆரம்பத்தில் எப்படி பழகினோமோ அப்படித்தான் இப்போதும் எங்களது நட்பு இருந்து வருகிறது என்று தெரிவித்துள்ள ராஷ்மிகா, எனது தோழியின் திருமண அலங்காரத்தில் மிக அழகாக இருந்தார். அவரை பார்த்து ஆச்சரியப்பட்டேன் என்றும் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த திருமண நிகழ்வில் ராஷ்மிகா அவர்களின் பாரம்பரிய வழக்கப்படி உடையணிந்து இருந்தார். அவர் மட்டுமல்லாது அவருடன் இருந்த தோழிகள் அனைவருமே இந்த ஸ்டைலில் உடை அணிந்திருந்தார்.