இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி நடிப்பில் உருவாகி உள்ள படம் “நெஞ்சுக்கு நீதி”. ஹிந்தியில் வரவேற்பை பெற்ற ஆர்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீ-மேக் இது. தன்யா ரவிச்சந்திரன் நாயகியாக நடித்துள்ளார். அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்பட டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
“நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் முதல்வர் ஸ்டாலின் பார்த்தார். பின்னர் படத்தின் நாயகனும், தனது மகனுமான உதயநிதி, இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மே 20ல் இந்த படம் திரைக்கு வருகிறது.