இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு | சின்னத்திரையில் பார்த்திபன் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‛விக்ரம்'. அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் சண்டைக்காட்சிகளை மட்டும் கிட்டத்தட்ட 75 நாட்கள் படமாக்கி உள்ளனர். அதற்கு ஏற்றாற்போல் படத்தின் டிரைலர் காட்சிகளும் அதிரடியாக அமைந்துள்ளன. இதனிடையே நேற்று இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய நடிகர் சிம்பு : ‛‛கமல் 50 விழா இங்கு தான் நடந்தது. அதில் நானும் பங்கேற்றேன். அந்த விழாவில் பேச நினைத்தேன், ஆனால் நடக்கவில்லை. இப்போது அந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தற்காக நன்றி. கமல் சார் எனக்கு ஆன் ஸ்கிரீன் குரு. இன்றைக்கு எல்லோரும் பான் இந்தியா என்று பேசுகிறார்கள். கமல் சார் தயவு செய்து உங்களின் மருதநாயகம் படத்தை ஒரு 5 நிமிடமாவது ரிலீஸ் பண்ணுங்க. அப்போது தான் எல்லோருக்கும் தெரியும் என்றார். அதோடு, விழாவில் சாண்டி மாஸ்டர் உடன் இணைந்து கமலின் பத்தல பத்தல பாடலுக்கு நடமும் ஆடி அசத்தினார்.
விழாவில் பேசிய ராதிகா : ‛‛கமலின் முந்தைய விக்ரம் படத்தில் லிசிக்கு நான் தான் டப்பிங் பேசினேன். எப்படியாவது இந்த விழாவில் கலந்து கொள்ள நினைத்தேன். எப்படி வந்தேன் என்று எனக்கு மட்டும் தான் தெரியும். தமிழன் ஜெயித்தால் பெரிய மகிழ்ச்சி. இப்போ எங்க பார்த்தாலும் தமிழ் தான். கமல் சாரை நினைத்தால் பெருமையாக உள்ளது'' என்றார்.