இணையத்தில் கசிந்த விஜய்யின் வாரிசு படக் காட்சி | இந்தியன் 2க்கு தயாரான காஜல் அகர்வால் | மாமனிதன் படத்திற்கு மேலும் 4 சர்வதேச விருதுகள் | ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது | சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் - விஜய் தேவரகொன்டா | தோல்விப் பட வரிசையில் அக்ஷய்குமாரின் 'ரக்ஷா பந்தன்' | வெள்ளித்திரையில் ‛விடுதலை' வேட்கை | இன்னும் ஓராண்டாகும் : ‛சலார்' புது ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்குப் படத்தை நிறுத்திவிட்டு வருகிறாரா ஷங்கர்? | திருவண்ணாமலையில் தேசியக் கொடி ஏற்றிய இளையராஜா |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பஹத்பாசில் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛விக்ரம்'. ஜூன் 3ல் திரைக்கு வர உள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. விக்ரம் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
இந்நிலையில் இந்த பட விழாவில் பேசிய உதயநிதி, ‛‛கமல் சாரை மிரட்டி இந்த படத்தை நான் வாங்கினேன் என்று எல்லாரும் கேட்கிறாங்க. அவரை யாரும் மிரட்ட முடியாது. கமல் யாருக்கும் பயந்தவர் இல்லை. கட்சியை அவர் சிறப்பாக நடத்துகிறார். வருடத்திற்கு ஒரு படமாவது நீங்க நடிக்கணும் என வேண்டுகோள் வைக்கிறேன். லோகேஷ் மாதிரியான இளைஞர்கள் படத்தில் வேலை பார்க்க நானும் ஆவலாய் இருக்கிறேன்'' என்றார்.