Advertisement

சிறப்புச்செய்திகள்

'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் | பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு

13 பிப், 2026 - 10:29 IST
எழுத்தின் அளவு:
I-will-disclose-my-taxi-business-and-bank-account-Dil-Raju
Advertisement

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் படம் 'டாக்சிக்'. இப்படத்தின் தெலுங்கு மாநில உரிமை ரூ.120 கோடிக்கும், ஆங்கிலம் அல்லாத வெளிநாட்டு உரிமை 105 கோடிக்கும் விற்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இரண்டுமே பில்ட்அப் செய்து கொடுக்கப்படும் செய்திகள் என ஒரு சர்ச்சை எழுந்தது.

யஷ் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'கேஜிஎப் 2' படம் தெலுங்கு மாநிலங்களில் மொத்தமாக 130 கோடி தான் வசூலித்தது. அப்படியிருக்கையில் 'டாக்சிக்' படத்தின் உரிமை எப்படி 120 கோடிக்குப் போகும் என்ற கேள்வியை எழுப்பினார்கள். விஜய் நடித்த 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தான் தெலுங்கு உரிமையை வாங்கியுள்ளார்.

'மார்க்கண்டேயா' தெலுங்கு படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தில் ராஜுவிடம் இது குறித்த கேள்வியை பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த தில் ராஜு, “தயாரிப்பாளருக்கு அந்தத் தொகையை நான் பரிமாற்றம் செய்த பின் வங்கிக் கணக்கைக் காட்டினால் நம்புவார்கள்,” என்று பதிலளித்துள்ளார்.

இதுவரையில் எந்த ஒரு தயாரிப்பாளரும் இப்படி பேசியதில்லை. வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்தி பின் தில் ராஜு அதைக் காட்டுவாரா என்ற சந்தேகமும் இப்போது எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சிமுதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ... யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap