'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் | பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு |

தமிழ் நடிகர் தனுஷ், ஹிந்தி நடிகை மிருணாள் தாகூர் இருவரும் நட்பாகப் பழகி வருகின்றனர். இருந்தாலும் அவர்கள் இருவரும் காதலர்கள் என்றும் பிப்ரவரி 14ம் தேதி திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் பத்து நாட்களுக்கு முன்பு பரபரப்பான செய்திகள் வெளிவந்தது.
இதனிடையே, பேட்டி ஒன்றில் இது குறித்து பேசுகையில், “பிப்ரவரி 14ம் தேதி ஏப்ரல் 1ம் தேதிக்கான முட்டாள்கள் தினமாக மாறப் போகிறது. யார் இதை ஆரம்பித்தது எனத் தெரியவில்லை. நான் திருமணம் குறித்து உறுதி செய்தேன் என்று கூட சிலர் இதை பரப்பியதைப் பார்த்த போது பயமாக இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் தனுஷ். 2024ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றார்கள். அவர்களுக்கு டீன் ஏஜ் வயதில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் பற்றி அவ்வப்போது இப்படி காதல் கிசுகிசு வருவது வாடிக்கையான ஒன்று.