ட்வின்ஸை வரவேற்க தயாராகும் ராம்சரண், உபாசனா தம்பதி | முத்தக்காட்சிக்கு செட் ஆகாத விஷ்ணு விஷால் | விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டம் : புதுமுக இயக்குனர் | கவிஞர் வாலி விருது பெறும் கங்கை அமரன் | எழுத்தாளர் பூமணியின் கசிவு கதையில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் | மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பஹத்பாசில் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛விக்ரம்'. இந்த படத்தின் இசை, டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி : கமல் உடன் நடிப்பேன் என கனவில் கூட நினைக்கவில்லை. ஆனால் அது நடந்தது. அவரது இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். நீங்க சொல்லிக் கொடுத்து நான் நடிக்க வேண்டும். இது எனது ஆசை.
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது போல் சகஜமாக மற்றவர்களிடம் பேசுவார். தான் ஒரு பெரிய ஆள் என்று அவர் ஒருபோதும் காட்டியதில்லை. இது தான் நான் அவரிடம் கற்ற முதல்படம். மனிதனாகவும், நடிகனாகவும் நிறைய நன்றிக்கடன் பட்டுள்ளேன். நான் நன்றாக நடிக்கணும் என்றெல்லாம் ஆசைப்படவில்லை. கமல் சார் உடன் இந்த படத்தில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அது நடந்தது. இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த லோகேஷிற்கு நன்றி. நீ இன்னும் பெரிய இடத்திற்கு வருவாய். பஹத்திடம் அப்படி ஒரு எனர்ஜி இருந்தது. மனுஷன் பிரமாதமாக நடிக்கிறார் என்றார்.




