திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? |
கமல் நடித்துள்ள விக்ரம் படத்தின் இசை, டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த படத்தில் சூர்யா சிறப்பு வேடத்தில் நடித்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வந்த நிலையில் இப்போது அதை உறுதிப்படுத்தி உள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
விக்ரம் பட விழாவில் லோகேஷ் பேசியதாவது : கமல் சாரை பார்த்தாலே பேச்சு வர மாட்டேன் என்கிறது. 125 நாட்கள் மொத்தம் படப்பிடிப்பு நடந்தது. அதில் 75 நாட்கள் சண்டைக்காட்சி மட்டும் இருந்தது. யாருக்கும் எந்த அடியும் படமால் அருமையாக சண்டைக்காட்சியை படமாக்கிய அன்பறிவுக்கு நன்றி. நான் இன்றைக்கு சினிமாவில் இந்த தூரம் வந்திருக்கிறேன் என்றால் அதற்கு கமல் சாரும் ஒரு காரணம். அவரின் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் எனக்கு பயம் இருக்கும்.
இந்த படம் இவ்வளவு பெரிதாக வந்ததற்கு கமல் சார் காரணம். நடிப்பு, தயாரிப்பு எல்லாவற்றையும் நான் கேட்டதை செய்து கொடுத்தார். எந்த கேள்வியும் அவர் கேட்டதில்லை. இந்த படத்தில் சூர்யா முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு நன்றி. நான் ஏன் அவருக்கு நன்றி சொல்கிறேன் என்பது படம் பார்க்கும் போது உங்களுக்கு தெரியும். இந்த படம் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மற்ற படங்களுக்கு இணையாக இது இருக்குமா என கேட்கிறார்கள். செய்யும் தொழிலுக்கு உண்மையாக இருக்க வேண்டும், நான் அப்படி தான் இந்த படத்தில் வேலை பார்த்துள்ளேன். படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் என்றார்.