ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
கமல்ஹாசன் நடித்து, தயாரித்துள்ள படம் ‛விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஜூன் 3ல் படம் திரைக்கு வர உள்ள நிலையில் இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாய் நடந்தது.
இதில் கமல், விஜய் சேதுபதி, அனிருத், லோகேஷ் கனகராஜ், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட விக்ரம் படக்குழுவினர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக சிலம்பரசன், அக்ஷரா ஹாசன், உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், இயக்குநர் ரவிக்குமார் என பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது : "சினிமாவும், அரசியலும் ஒட்டிப் பிறந்தவை. அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை. அதற்கு யார் இடையூறாக வந்தாலும் எதிர்த்து நிற்பேன். இதற்கும், அரசியலுக்கும் சம்மந்தமில்லை. தாய் மொழியை விட்டுவிடாதீங்க. ஹிந்தி ஒழிக என்று சொல்ல மாட்டேன். அதேசமயம் குஜராத்தி, சைனீஸ் மொழி பேசுங்க. ஆனா தமிழ் வாழ்க என்று சொல்வது கடமை. இந்தியாவின் அழகு அதன் பன்முகத்தன்மை இந்த மேடையில் தனியாக ஒரு தம்பிக்கு நன்றி சொல்ல கடமைபட்டிருக்கேன். கடைசி நேரத்தில் கைகொடுத்தவர் சூர்யா. அவருக்கு நன்றி" என்றார்.