6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! | வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் | 17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி |
மிருகம் படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆதி. பிரபல தெலுங்கு இயக்குனரான ரவிராஜா பினிஷெட்டியின் மகனான இவர் தொடர்ந்து தமிழ் திரையுலகிலேயே கவனம் செலுத்தி படங்களில் நடித்து வந்தார். ஈரம் படம் இவருக்கு ஒரு திருப்புமுனையான படமாக அமைந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு யாகவராயினும் நா காக்க, மரகதநாணயம் ஆகிய படங்களில் நடிகை நிக்கி கல்ரானியுடன் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதை உறுதி செய்வது போல இருவருக்கும் எளிய முறையில் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது.
இந்த நிலையில் வரும் மே 18-ம் தேதி இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற இருக்கிறது. இதையடுத்து நடிகர் ஆதி, ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருக்கும் அஜித்தை நேரில் சந்தித்து தனது திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் அஜித்துடன் இவர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இந்த படத்தில் ஆதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தாலும் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் தற்போது அஜித்தை அவர் சந்தித்தது தனது திருமணத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுப்பதற்காக மட்டுமே என்று சொல்லப்படுகிறது.